மேசையில் பறந்த நோட்டுகள்... ஆக்ரோஷமாக சண்டையிட்ட தாசில்தார் - அதிர்ச்சி வீடியோ

x

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் எச்டி கோட்டை தாலுகாவில் மினி விதான் சவுதா அரசு அலுவலகத்தில் நேற்று மாலை பெண் தாசில்தார் ரத்னாம்பிகா மழை பாதிப்பு குறித்து ஆய்வு கூட்டம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு விவசாய சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் தாசில்தாரிடம் மழை வெள்ள பாதிப்பு நிவாரண நிதி வழங்க அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார் கூறினர். அதற்கு தாசில்தார் பிடி கொடுக்காமல் பேச இதற்கு பதில் தந்தே ஆக வேண்டும் என விவசாய சங்க உறுப்பினர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த தாசில்தார் விவசாய சங்க உறுப்பினர்களிடம் சண்டையிட துவங்கினார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்