"தங்கம், வைரம் மட்டும் அல்ல..செருப்பை கூட விட்டுவைக்க வில்லை"-வீட்டையே ஒரு கை பார்த்த பலே திருடர்கள்

x

"தங்கம், வைரம் மட்டும் அல்ல..செருப்பை கூட விட்டுவைக்க வில்லை"-வீட்டையே ஒரு கை பார்த்த பலே திருடர்கள்

ஊரப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நிர்மலா ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை ஊழியர்.


இவரது மகள் ஹனி சோஃபியா ஐடி ஊழியராக உள்ளார்... உடல் நிலை சரியில்லாத தனது தாயைக் கவனித்துக் கொள்ள நிர்மலா நிர்மலா தஞ்சாவூர் சென்றுள்ளார். சோஃபியாவும் முடிச்சூரில் உள்ள தனது மாமா வீட்டிற்கு சென்றிருந்தார்...


இதனிடையே பூட்டை உடைத்து நிர்மலாவின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், 25 சவரன் தங்க நகைகள், 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரம், வெள்ளி பொருட்கள், 28 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.


அத்துடன் விடாமல், பவர் பேங்க், ப்ளூடூத் ஹெட்செட், பயன்படுத்தப்பட்ட லிப்ஸ்டிக், சென்ட் பாட்டில், பெல்ட், காலணி, கைக்கடிகாரம் என்று வகை தொகையில்லாமல் திருடியுள்ளனர்... திருடிய நகைகளை அடகாவது வைக்க முடியும், பயன்படுத்திய அழகு சாதனங்களை வைத்து திருடர்கள் என்ன தான் செய்யப் போகிறார்கள் என்ற சந்தேகத்துடன், போலீசார் விநோத கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்