வடகொரியாவின் உளவு ஏவுகணை.. அச்சப்படும் வல்லரசு நாடுகள்..காரணம் என்ன? | north korea | thanthi tv

x

உளவு செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்குவதற்கான முக்கியமான இறுதிக் கட்ட சோதனை நடத்தியதை வடகொரியா உறுப்படுத்தியுள்ளது. இந்த செயற்கைக்கோளின் தயாரிப்பு பணிகள் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் நிறைவுறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் கிழக்கு கடற்கரையை நோக்கி 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வடகொரியா ஏவியதாக தென்கொரியா மற்றும் ஜப்பானிய ராணுவங்கள் அறிவித்ததற்கு அடுத்த தினமே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வடமேற்கு நகரமான டோங்சாங்-ரியில் உள்ள அதன் சோஹே செயற்கைக்கோள் ஏவுதளத்தில் நடத்தப்பட்ட சோதனையானது, செயற்கைக்கோள் படங்கள், தரவு பரிமாற்றம் மற்றும் தரைக் கட்டுப்பாட்டு அமைப்புகளின் திறனை மதிப்பாய்வு செய்தல் உள்ளிட்டவற்றிற்காக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்