"இனி கறி சாப்பிட்டால் செக்ஸ்-க்கு நோ நோ" - பீட்டா அதிரடி

x

விலங்குகளை பாதுகாக்கிறோம் என சொல்லி பிரசாரம் செய்யும் அமைப்பு பீட்டா.. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி சர்ச்சையை சம்பாதித்த அமைப்பு... இந்த நீதிமன்றம் விசித்திரமான பல வழக்குகளை சந்திக்கிறது என்ற திரைப்பட வசனத்தை போல்.. பீட்டாவும் பல விசித்திரமான அறிவிப்புகளை வெளியிட்டு கவனம் பெறுவது வாடிக்கை...

முட்டை சாப்பிடுவது கோழிகளுக்கு செய்யும் கொடுமையென்று குற்றம்சாட்டும் பீட்டா, முட்டையில்லாமல் ஆம்லெட் செய்வது எப்படி என்ற டிப்ஸ்களையும் வெளியிட்டு வருகிறது.

இப்போது அந்த வரிசையில் மற்றொரு பிரசாரத்தை தொடங்கியிருக்கும் பீட்டா, பெண்களை தங்களுக்கு சாதமாக இழுக்க முயற்சித்திருக்கிறது.

ஆம்... இறைச்சி சாப்பிடும் ஆண்களை தண்டிக்க அவர்களுடன் பாலியல் உறவை தவிருங்கள் என அழைப்பு விடுத்துள்ளது.

ஏன் இந்த பிரசாரம் என்பதற்கான விளக்கத்தையும் கொடுத்திருக்கிறது.. ஆண்கள் அதிகமாக இறைச்சி சாப்பிட்டு காலநிலை பேரழிவுக்கு வழிவகை செய்வதால் உலகை காப்பாற்ற இந்த தண்டனை அவசியம் என அறைகூவல் விடுத்துள்ளது பீட்டா...

உலக அளவில் பீட்டாவின் இந்தப் பிரசாரம் பேசுபொருளாகியிருக்கிறது. இதற்கு இணையத்தில் விமர்சனங்களும் எழுந்துள்ளன. பல மீம்ஸ்கள் பறக்கிறது... சோதிக்காதீங்கடா... சோதிக்காதீங்க... என பலரும் கடுப்போடு நகைத்துச் செல்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்