"படம் இயக்கும் எண்ணம் இல்லை" - மாதவன் திடீர் கருத்து

x

"படம் இயக்கும் எண்ணம் இல்லை" - மாதவன் திடீர் கருத்து


தான் ஒரு தற்செயலான இயக்குநர் தான் என்று நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்... மாதவன் இயக்குநர் அவதாரம் எடுத்த ராக்கெட்ரி: நம்பி விளைவு திரைப்படம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. தான் நடித்துள்ள தோக்கா திரைப்படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்ட மாதவன் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தான் எதிர்காலத்தில் படங்களில் நடிப்பதில் தான் அதிக கவனம் செலுத்த உள்ளதாகவும், விரைவில் எந்தப் படத்தையும் இயக்குவதில் ஆர்வம் இருப்பதாக நினைக்கவில்லை என்றும்... ஒருவேளை படம் இயக்க வேண்டுமெனில் அது தன் இதயத்தைத் தொட்டதாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்