வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை மிதித்து கொன்ற யானை"ரத்தமெல்லாம் சிதறி கிடக்குது.."கதறும் மக்கள்

x

நீலகிரி மாவட்டம் கூடலூரில் பெண் ஒருவரை காட்டு யானை கூட்டம் மிதித்து கொன்ற நிலையில், யானைகளை பிடிக்கும் வரை, உயிரிழந்தவரின் உடலை வாங்கப் போவது இல்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் யானைகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டுள்ளது. இன்று அதிகாலை தேவாலா வாளவயல் பகுதியில் வீடு ஒன்றை அடித்து உடைத்த யானை, வீட்டினுள் உறங்கிகொண்டிருந்த பாப்பாத்தியம்மாளை மிதித்து கொன்றது. மேலும் வீட்டில் இருந்த இருவர் படுகாயமடைந்தனர். இதுக்குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் போலீசார், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தும் யானைகளை பிடிக்க வேண்டும் என்றும், அதுவரை உயிரிழந்த பாப்பாத்தியம்மாளின் உடலை வாங்கப்போவதில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்