"இது எங்க Area இங்க, நாங்க வச்சது தான் சட்டம்" - அரசுப்பேருந்தை வழிமறித்த காட்டு யானைகள்

x

நீலகிரி மாவட்டம் கெத்தை மலைப்பாதையில் சென்ற அரசுப்பேருந்தை வழிமறித்து, குட்டியானை உட்பட 5 காட்டு யானைகள் சாலையில் நடந்து சென்றன. நீண்ட நேரமாக பேருந்துக்கு வழிவிடாமல் சாலையில் யானை கூட்டம் ஒய்யாரமாக நடந்து சென்றதால், பேருந்தை மிக மெதுவாக ஓட்டுநர் இயக்கினார். அரைமணி நேரம் கழித்து யானை கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றபின், ஓட்டுநர் வழக்கமான வேகத்தில் பேருந்தை இயக்கினார். அரசுப்பேருந்தை காட்டு யானைகள் வழிமறித்து சென்றதால், சிறிது நேரம் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்