முதுகலை நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழக, புதுச்சேரி மாணவர்களுக்கு ஆளுநர் தமிழிசை வாழ்த்து

முதுகலை நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள தமிழக, புதுச்சேரி மருத்துவ மாணவர்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்
x

முதுகலை நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள தமிழக, புதுச்சேரி மருத்துவ மாணவர்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தேசிய அளவில் போட்டியிட்டு வென்று தேசமெங்கும் மருத்துவ பட்ட மேற்படிப்பு படிக்க செல்லும் தமிழக,புதுச்சேரி மாணவச் செல்வங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும்... பாராட்டுக்களும் என பதிவிட்டுள்ளார். முயற்சி திருவினையாக்கும் எனவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், மருத்துவ மேற்படிப்பு நுழைவு தேர்வு முடிவுகளை மிகவும் குறுகிய காலத்தில் வெளியிட்டதற்காக மத்திய சுகாதரத்துறையையும் பாராட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்