தபால் அலுவலகங்களில் தேசியக்கொடி... | ஆர்வமுடன் வாங்கும் பொதுமக்கள்

x

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக, அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையொட்டி, மதுரையில் தலைமைத் தபால் நிலையம், அரசரடி, தல்லாகுளம் தபால் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கொடி 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பொதுக்கள் அவற்றை ஆர்வமுடன் வாங்கிச் செல்கிறார்கள். ஒரே நாளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான கொடிகள் விற்பனையாகி உள்ளதாக தபால் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்