"ஒரு மாத உழைப்பு எல்லாம் வேஸ்ட்னு சொல்றாங்க" - அரசு கல்லூரி மாணவிகள் குமுறல்

x

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக் கல்லூரி முதல்வர் பால்கிரேஸை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பயிற்சி நோட்டில் கையெழுத்திட முதல்வர் மறுப்பதாகவும், கையெழுத்து பெறச் சென்ற பேராசிரியரை மாணவிகள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கல்லூரியில் எந்தவித அடிப்படையும் வசதியும் செய்து கொடுக்காமல், பேராசிரியர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படும் கல்லூரி முதல்வர் பால் கிரேஸை திரும்ப பெற வேண்டும் என மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்