பைக்கில் லேசாக உரசிய ஆட்டோவை கடத்தி சென்ற மர்ம நபர்கள் - டிரைவருக்கு வெட்டு.. சென்னையில் பயங்கரம்

x

திருவேற்காட்டில் கடத்தப்பட்ட ஆட்டோவை மீட்க சென்றவர் அரிவாளால் வெட்டப்பட்ட விவகாரத்தில், போலீசாரை கண்டித்து சாலைமறியல் போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை நசரத்பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பாலமுருகன், திருவேற்காடு பகுதியில் சென்றபோது, மர்ம நபர்கள் இருவர் அவரது ஆட்டோவில் இருசக்கர வாகனங்களால் மோதியதாக கூறப்படுகிறது.

பின்னர் இருசக்கர வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுவிட்டதாக கூறி பணம் கேட்டு, ஆட்டோவை கடத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஆட்டோவை மீட்ட பாலமுருகன் சென்றபோது, மர்ம நபர்கள் இரும்பு ராடால் தாக்கியும், அரிவாளால் வெட்டியும் உள்ளனர்.

இதில் பிரகாஷ் என்பவருக்கு வெட்டு காயமும், மேலும் சிலருக்கு காயமும் ஏற்பட்டது.

இந்தநிலையில் இதுகுறித்து புகாரளிக்கப்பட்டும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, ஆட்டோ சங்க நிர்வாகிகள் திருவேற்காடு பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்