காலை - ஈபிஎஸ் ஆதரவாளர்கள்... மதியம் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள்... அதிமுக வழக்கில் உத்தரவு

x

அதிமுக அலுவலக கலவர வழக்கு தொடர்பாக, முன் ஜாமின் பெற்ற ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே கலவரம் வெடித்தது. இவ்வழக்கு தொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 70 பேரை தினமும் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, ஈ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு 10 முதல் 12 மணி வரையிலும், ஓபிஎஸ் தரப்பினருக்கு மதியம் 2 முதல் 4 மணி வரையும் கையெழுத்திட்ட நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்படி, ஈபிஎஸ் தரப்பை சேர்ந்த 38 பேர் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 25 பேர் கையெழுத்திட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்