"பணத்தை எல்லாம் கொடுக்க முடியாது" ; மிரட்டல் விடுத்த டிராவல்ஸ் அதிபர் - வைரல் ஆடியோ

"பணத்தை எல்லாம் கொடுக்க முடியாது" ; மிரட்டல் விடுத்த டிராவல்ஸ் அதிபர் - வைரல் ஆடியோ
x

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த டிராவல்ஸ் அதிபர், பணம் கேட்டு போன் செய்தவர்களுக்கு மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகி உள்ளது. கோவில்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவர், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக முகநூலில் பதிவிட்டுள்ளார். இதனை நம்பி இளைஞர்கள் பலரும் சென்னை தி.நகரில் உள்ள டிராவல்ஸ் அலுவலகத்திற்கு சென்று பணத்தை கொடுத்தள்ளனர். ஆனால் பணத்தை வாங்கிய அவர் வேலை வாங்கித் தராமல் இருக்கவே, அதுகுறித்து கேட்ட போது சரவணன் தரப்பு மிரட்டல் விடுத்துள்ளது. பணம் கேட்டு செல்போனில் பேசியவர்களிடம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்