நாடாளுமன்ற தேர்தல் மநீம-வின் வியூகம் என்ன? - மநீம தலைவர் கமலஹாசன் நாளை ஆலோசனை

x

நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் வகுப்பது, மற்றும் கூட்டணி குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். சமீபத்தில் அவர் தேர்தலுக்கு தயாராவது குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி இருந்தார். அப்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்குவதற்கு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், நாளைய தினம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது மதியம் 12 மணிக்கு ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பது, கூட்டணி அமைப்பது குறித்து கமல்ஹாசன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்