மீண்டும் தொடங்கிய ஏவுகணை தாக்குதல்... சிதறி ஓடிய மக்கள்...நெஞ்சை பதற வைக்கும் அடுத்த சம்பவம்

x

பாலஸ்தீன் நாட்டின் காசா மீது இஸ்ரேல் ராணுவம் இரண்டாவது நாளாக ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ், அஸ்கெலான், ஸ்டேரோட் உள்ளிட்ட நகரங்கள் நோக்கி, நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி பாலஸ்தீனை சேர்ந்த பயங்கரவாதிகள் குழு தாக்குதல் நடத்தினர். பெரும்பாலானவை இடைமறித்து முறியடிக்கப்பட்டன. அஸ்கெலான் உள்ளிட்ட இடங்களில் வீடுகள், கார்கள் சேதமடைந்த‌தோடு, வயல்வெளிகள் தீப்பிடித்து எரிந்தன. எச்சரிக்கை சைரன் ஒலித்த‌தால், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாலஸ்தீனின் காசா மீது வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், 5 வயது சிறுமி, இஸ்லாமிக் ஜிகாதி தீவிரவாதிகள் குழுவை சேர்ந்த கமாண்டர் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இரண்டாவது நாளாக மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், வீடு ஒன்று முற்றிலுமாக தரைமட்டமானது. ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் எல்லையில் இரு தரப்பும் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்