அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு...தீர்ப்பை ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்

x

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு...தீர்ப்பை ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம் | Senthil Balaji

இது குறித்த வழக்குகள் நீதிபதி வி.சிவஞானம், முன் விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி தரப்பில், அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத் துறை தரப்பு, தமிழக அரசில் அதிகாரமிக்க நபராக செந்தில் பாலாஜி உள்ளதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு அமலாக்கப்பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளதால், அவற்றை ரத்து செய்யக்கூடாது என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்குகளை ரத்து செய்யக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை அக்டோபர் 31 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்