வரவேற்பு பேனரில் அமைச்சர்... அன்பில் மகேஷ் படம் மறைப்பு... கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பு

x

திருச்சி அருகே அமைச்சர்களை வரவேற்க வைத்திருந்த பேனரில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி படம் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்ட சம்பவம், சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளரையில் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில், நந்தவனம் உருவாக்கப்பட்டு, அதில்

மரக்கன்றுகள் நடப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது. இதில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு நந்தவனத்தை திறந்து வைத்தனர். விழா நடைபெற்ற இடத்தில் அமைச்சர்களை வரவேற்க, கட்சி நிர்வாகிகள் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர். அதில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி படம் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டிருந்த சம்பவம், நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்