பண்ணை வீட்டில் மெகா சூதாட்டம்... திமுக பிரமுகர்கள் கைது

x

பண்ணை வீட்டில் மெகா சூதாட்டம்... திமுக பிரமுகர்கள் கைது


ஈரோடு அருகே பண்ணை வீட்டில் சூதாட்டம் ஆடிய திமுக பிரமுகர்கள் உட்பட 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கருங்கல்பாளையம், சாய்குரு நகரில் உள்ள பண்ணை வீட்டில் பணம் வைத்து மெகா சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. பண்ணை வீட்டில் நுழைந்த போலீசாரை பார்த்தவுடன், அங்கிருந்த கும்பல் நாலாபுறம் ஓட முயற்சித்தனர். போலீசார் அனைவரையும் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். திமுக பிரமுகர்கள் அலாவுதீன், சின்னதுரை உட்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர். பண்ணை வீட்டில் இருந்து கட்டு கட்டாக சீட்டு கட்டுகள், 3 லட்சத்து 16 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் 4 சொகுசு கார்கள், 3 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்