திருமணம் உடல் இன்பத்துக்கு மட்டுமல்ல - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

x

திருமணத்தின் அடிப்படை நோக்கமே சந்ததியினரை உருவாக்கத் தானே தவிர உடல் இன்பத்துக்கு மட்டுமல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.சென்னையில் கணவனை விட்டு பிரிந்த மனைவி ஒருவர், தனது இரு மகன்களையும் தன்னிடம் ஒப்படைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகிருஷ்ணன் ராமசாமி அமர்வு, திருமணம் என்பது சந்ததியினரை உருவாக்கத் தானே தவிர, உடல் இன்பத்திற்காக மட்டும் அல்ல என்றும், குழந்தைகளை தாயை விட்டு பிரிப்பது அவர்களை துன்புறுத்தும் செயலாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது ஒரு மனிதாபிமானமற்ற செயல் மட்டுமின்றி, குழந்தைக்கு தீங்கு விளைவிப்பதாகும் எனக் கூறி, இரு குழந்தைகளையும் தாயின் தற்காலிக கட்டுப்பாட்டில் இருக்க உத்தரவிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்