#BREAKING || மாண்டஸ் புயல் - 16 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உட்பட 16 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயலால் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், இன்றும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
இதே போன்று, திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மற்றும் சிறுமலை பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story