மீண்டும் சர்ச்சையில் மதுரை எய்ம்ஸ்.. இப்போதைய நிலை என்ன?

x

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் 95 சதவீதம் முடிந்துள்ளதாக பாஜகாவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியது சர்சைக்குள்ளாகியுள்ளது.

அந்த பகுதிக்கு சென்ற சி.பி.எம் எம்.பி, சு.வெங்கடேசன் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர் அங்கு கட்டுமான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை என புகைப்படத்தை வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளனர்.

2015 பிப்ரவரி 28ல் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை ஒன்று உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

2018 ஜூன் 18ல் மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட தேவையான இடம் தேர்வு செய்யப்பட்டது.

2018 டிசம்பர் 17ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

2019 ஜனவரி 27ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

2019 நவம்பர் 25ல் எய்மஸ் மருத்துவமனையின் சுற்றுச் சுவர் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது.

2020 நவம்பர் 3ல், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக 220 ஏக்கர் நிலம் தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது

2021 பிப்ரவரி 21ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக எம்.ஹனுமந்த ராவ் நியமிக்கப்பட்டார்.

2021 மார்ச் 26ல், மதுரை எய்ம்ஸ் கட்டுமான திட்டத்திற்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்திடம் இருந்து 1,627 கோடி ரூபாய் கடன் பெற ஒப்பந்தம் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்