குழந்தைகளுடன் வாழ்ந்தாலும் 23 வடங்களுக்கு பின் கரம் பிடித்த காதல் பறவைகள்! - ஒரு ஆச்சர்ய திருமணம்

x

1980களில் காதலில் விழுந்து காலத்தின் கோலத்தால் பிரிந்த 2 காதல் பறவைகள் 23 ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் முடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க பெண்ணான கிரேஸ் மிக்சியாக்சியோவும், ஆஸ்திரேலியரான ஜான் ஹிரானும் 1980ல் விருந்து ஒன்றில் சந்தித்த போது காதலில் விழுந்தனர். ஆனால் விசா காலம் முடிந்து ஜான், ஆஸ்திரேலியா சென்றது முதல் இவர்களால் அந்த காலத்தில் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வது சிரமமானது. காலத்தின் விளையாட்டால் இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவரவர் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டு குழந்தைகளுடன் வாழ்ந்தாலும், மாறாத அதே காதலால் 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவரும் திருமணத்தில் இணைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்