நடுரோட்டில் பேருந்து ஓட்டுநருடன் கட்டி உருண்டு சண்டையிட்ட லாரி ஓட்டுநர் - களேபரமான சாலை...

x

கேரள மாநிலம் பாலக்காட்டில் பேருந்து ஓட்டுநரும் லாரி ஓட்டுநரும் ஒருவரை ஒருவர் மூர்க்கமாக தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன... பட்டாம்பி அருகே யானையை ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநருக்கும், தனியார் பேருந்து ஓட்டுநருக்கும் சாலையில் வழி விடுவது தொடர்பாக வாக்குவாதம் எழுந்தது... யானையுடன் லாரியை ஓரங்கட்டி விட்டு விறுவிறுவென நடந்து வந்த லாரி ஓட்டுநர், பேருந்து ஓட்டுநரைத் தாக்கத் துவங்கினார்... தொடர்ந்து கீழே இறங்கி வந்த பேருந்து ஓட்டுநரும் மாறி மாறி தாக்குதல் நடத்திய நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அருகில் இருந்தவர்கள் தடுக்க முயன்றும் சண்டை தொடர்ந்த நிலையில், அப்பகுதியே களேபரமாக காட்சியளித்தது...


Next Story

மேலும் செய்திகள்