லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து.... சுக்குநூறாக நொறுங்கிய கார்...

x

லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து.... சுக்குநூறாக நொறுங்கிய கார்...

தெலங்கானாவின் கோடங்கல் தர்காவில் வழிபாட்டை முடித்து விட்டு கர்நாடக மாநிலம் ராய்ச்சூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.


அப்போது, அதிகாலை இரண்டரை மணியளவில் யாதகிரி மாவட்டத்தின் குர்மித்கல் பகுதியில் எதிரே வந்த சரக்கு லாரியும், அவர்கள் பயணித்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.


இதில், 1 வயது குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், மேலும் 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்.


லாரி ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்