லாரியை தண்டவாளத்தில் தள்ளிவிட்ட மினி லாரி - மலைப்பாதையில் நடந்த பயங்கர விபத்து

x

தென்காசி அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட லாரிகள், ரயில்வே தண்டவாளத்தில் விழுந்த விபத்தில், லாரிகளின் ஓட்டுனர்கள் படுகாயமடைந்தனர். தென்காசி மாவட்டம் கோட்டை வாசல் அருகேயுள்ள மலைப்பகுதியில், கனரக லாரி ஒன்றும், மினிலாரி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதோடு, மலை சரிவில் உருண்டு ரயில்வே தண்டவாளத்தில் விழுந்தன. இதில் லாரிகளின் ஓட்டுனர்கள் இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நிகழ்ந்தபோது, அப்பகுதியில் ரயில் வராததால், ஓட்டுனர்கள் இருவரும் உயிர் தப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்