நடிகர் விஜய்யின் வீட்டு முன்பு ஜொலிக்கும் விளக்குகள்

x

சென்னை நீலாங்கரையில், அமைந்துள்ள நடிகர் விஜய்யின் வீடு அருகே தேசியக்கொடி நிறத்திலான மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் 75 வது சுதந்திர தினவிழா, நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுமாறு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் பலரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியினை ஏற்றி வருகின்றனர். இந்நிலையில், நீலங்கரை பகுதியில் உள்ள நடிகர் விஜய் வீட்டின் தெருமுனையில் உள்ள இரு மரங்களில் மூவர்ணக்கொடியின் வண்ணத்தை போல் மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்பட்டு ஜொலிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்