எங்க பாதி பம்ப்பை காணோம்!... குடிநீர் பம்ப்பை தேடிய மக்களுக்கு அதிர்ச்சி

x

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகிறது. சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 2வது தெருவில், சாலையில் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. தரைக்கு மேல் 2 அடி உயரத்திற்கு கால்வாய் அமைக்கப்படுவதால், கழிவு நீர் எப்படி செல்லும் என கேள்வி எழுப்பியுள்ள அப்பகுதி மக்கள், மழை பெய்தால், தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விடும் சூழல் உருவாகியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பயன்பாட்டில் இருந்த குடிநீர் அடி பம்பை அகற்றாமல், அப்படியே புதைத்தவாறு கால்வாய் கட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் இருசக்கர வாகனம், ஜீப் உள்ளிட்டவற்றை அகற்றாமல் சாலை அமைத்த‌து பெரும் சர்ச்சையான நிலையில், தற்போது குடிநீர் பம்ப்பை புதைத்திருப்பது ச‌ர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கான்கிரீட்டை உடைத்து மாநகராட்சி ஊழியர்கள் குடிநீர் ப‌ம்பை அகற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்