இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-11-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 26 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...தமிழத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நடவடிக்கை...

மதுரையில் இருந்து சென்னைக்கு திரும்பிய நிலையில் சென்னை வேளச்சேரி பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு...மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் கேட்டறிந்தார்....

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா...பிரதமர் மோடி பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்...

பெண் சக்தியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு,தேசிய உணர்வுமிக்க மாநிலமாகவும் திகழ்கிறது....காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு...

காசி தமிழ் சங்கம விழாவில் தமிழகத்தின் மொழி, கலாச்சாரம் உள்ளிட்டவை கொண்டாடப்படும்..பிரதமர் மோடி உறுதி

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்..பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை...

உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருவதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்...அனைத்து மாநிலங்களும் கவனிக்கும் வகையில் தமிழகத்தின் கல்வித் திட்டங்கள் இருப்பதாகவும் பேச்சு...


Next Story

மேலும் செய்திகள்