இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (22-09-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

வரைவு துறைமுகங்கள் மசோதா 2022,ல் மாநிலங்களின் உரிமைகளை பாதிக்கும் பிரிவுகளை அகற்ற வேண்டும்..

பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்....

==========================================

திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுக்களை கண்காணிக்கவே தனியாக குழு அமைக்க வேண்டும்....

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்....

===============================================

சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் கலந்து கொண்ட கூட்டத்தில், அரிவாளுடன் முதியவர் சுற்றியதால் பரபரப்பு....

முதியவரை பிடித்து போலீஸார் விசாரணை...

=============================================

கோவையில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு....

பாஜகவினர் சாலைமறியல்... மர்மநபர்களை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு...

==================================================

நாமக்கல் அருகே, பட்டியலின மாணவர்களை தாக்கிய புகாரி​ல்,

அதிமுக பிரமுகர் மீது பிசிஆர் சட்டத்தில் வழக்குப்பதிவு...

போலீசாரைக் கண்டித்து முழு அடைப்பு போராட்டம்...

======================================================

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட திட்டங்களுக்கு செலவழித்தபோதும் வருவாய்த்துறையில் நிதி பற்றாக்குறை பெருமளவு குறைந்துவிட்டது....

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல்...

======================================================

மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் மாற்ற நடவடிக்கை...

550 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேச்சு...

=======================================================

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன...

பிரதமர் மோடி, விரைவில் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என ஜே.பி. நட்டா தகவல்...

=========================================================

தமிழகம் உள்பட 15 மாநிலங்களில்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்ஐஏ சோதனை...

45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தகவல்...

===================

தமிழகத்தில் சென்னை, கோவை உள்​ளிட்ட 12 மாவட்டங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ. சோதனை நிறைவு...

10 பேரை விசாரணைக்கு அழைத்துள்ளதாக தகவல்...

======================================================

சென்னையில், என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து,

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்...

70 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு...

=============================================================

என்.ஐ.ஏ அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை......

13 மாநிலங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், முக்கிய ஆலோசனை.....

================================================

எஸ்டிபிஐ தலைவர்களை அச்சுறுத்தவே என்.ஐ.ஏ-வை

ஏவி விட்டு மத்திய அரசு சோதனை நடத்துகிறது..

எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் குற்றச்சாட்டு...

======================================================

மாற்றங்கள் அனைத்திற்கும் அரசியல்தான் காரணம்...

மாணவர்கள் அரசியல் பேசி தெளிவு பெற வேண்டும் என

திமுக எம்.பி. மு.க.கனிமொழி பேச்சு...

======================================================

அதிமுகவில் அனைவரும் ஒன்று சேர்ந்தால் கட்சி பலம்...

ஊர் கூடித்தான் தேர் இழுக்க முடியும் என நடிகர் எஸ்.வி. சேகர் கருத்து...

==================================================

திமுகவின் உட்கட்சி தேர்தலில்,

மாவட்ட செயலாளர் பதவிகளுக்கு நிர்வாகிகள் கடும் போட்டி...

தற்போதைய நிர்வாகிகளுக்கு எதிராக குவியும் மனுக்கள்...

==============================================

தமிழகத்தில் காய்ச்சல் பரவுவதாக கூறப்படும் நிலையில், சுகாதாரத்துறையின் வழிமுறைகளை, பள்ளிக்கல்வித்துறை பின்பற்றுகிறது...

பள்ளிகளுக்கு விடுமுறை விட தேவையில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி...

======================================

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குறித்து அவதூறு பேச்சு..

பாஜக நிர்வாகி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு...

==============================================

தீபாவளி பண்டிகைக்கு 200 கோடி ரூபாய்க்கு ஆவின் இனிப்புகளை செய்ய இலக்கு ...

பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேட்டி...

========================================

அதிமுக அலுவலக கலவர வழக்கில், முன் ஜாமின் பெற்ற ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள்...

சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து...

=========================================

கிரிப்டோ கரன்சி விவகாரத்தில், கத்தி முனையில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் மீட்பு...

கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது.. தப்பியோடிய மேலும் 2 பேருக்கு வலைவீச்சு...

===============================================

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் ஸ்வாதி கொலை செய்யப்பட்டதற்கு ரயில்வே நிர்வாகமே காரணம்....

3 கோடி ரூபாய் இழப்பீடு கோரி ஸ்வாதியின் தாயார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி...

===================================================

தர்மபுரி அருகே ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு கடத்தப்பட்ட 17 வயது சிறுவன் மீட்பு.....

கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கைது... தீவிர விசாரணை....

===================================

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்குகளில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும்...

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தகவல்....

=============================================

மகாராஷ்டிரா, தானே மாவட்டத்தில் 5 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து...

இடிபாடுகளில் சிக்கி 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி...

======================================================

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு....

உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நாளை விசாரணை....

============================

ஜூலியஸ் கோப்பை செஸ் போட்டி தொடர்..

காலிறுதி சுற்றுக்கு, இந்திய செஸ் வீரர்கள் பிரக்ஞானந்தா மற்றும் அர்ஜூன் எரிகேசி முன்னேற்றம்...

===============================

இந்தியா- ஆஸ்திரேலியா போட்டிக்கான டிக்கெட் பெற ஹைதராபாத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அலைமோதிய கூட்டம்....

கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி - நெரிசலில் சிக்கி பெண் உயிரிழப்பு....

==================================================================

இந்தியா-ஏ மற்றும் நியூசிலாந்து-ஏ அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி...

7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா-ஏ அணி அபார வெற்றி....




Next Story

மேலும் செய்திகள்