"அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டி பரிசளிக்கப்படும்" - தீர்மானம் நிறைவேற்றம்

x

மதுரை அவனியாபுரத்தில் காங்கிரஸ் தகவல் அறியும் உரிமைச்சட்ட அணியின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு, ஜிஎஸ்டி வரிவிதிப்பை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்த பெட்ரோல், டீசல் விலையை பாஜக அரசு தற்போது வழங்கினால், அதற்கு பரிசாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டி பரிசளிப்போம் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்