ஆந்திராவிலிருந்து நீர் வந்தும் வறண்டு போன ஏரிகள்..! மண்ணைப்போட்ட குத்தகை தாரர்களால் குமுறும் மக்கள்

x

ஆந்திராவிலிருந்து நீர் வந்தும் வறண்டு போன ஏரிகள்..!மண்ணைப்போட்ட குத்தகை தாரர்களால் குமுறும் மக்கள்

பாலாற்றில் வெள்ளம் கரைபுண்டு ஓடிய போதும், கால்வாய் அடைப்பட்டதால் பிரதான ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லை என அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர். திருப்பத்தூரில் இருக்கும் உதயேந்திரம், பள்ளிப்பட்டு, சங்கரபுரம் மற்றும் நாகலேரி ஏரிகள் பாலாற்று நீரை தேக்கி வைத்து பாசனத்துக்கு உதவி வருகின்றன. ஆனால் பாலாற்றில் இருந்து வெளியேறும் நீர் ஏரிகளை அடையும் விதமாக அமைக்கப்பட்ட கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், துர்வாரப்படாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், ஏரிக்கான நீர்வரத்து இல்லை என கூறும் விவசாயிகள், ஏரி மீன்களை குத்தகை எடுக்கும் சிலர், மீன்கள் நீரில் அடித்து செல்லாமல் இருக்க மண் கொட்டி கால்வாய் நீரை தடுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்