கும்பகோணம் மடத்தில் ரகசியமாக பதுக்கி வைத்திருந்த சாமி சிலைகள் கண்டுபிடிப்பு

x

கும்பகோணத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பதுக்கி வைக்கப்படிருந்த சாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் மெளனசாமி மடத்தில் பழங்கால உலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த புகாரின் பேரில், சிலை கடத்தல் போலீசார் அங்கு சோதனை செய்தனர்.

அப்போது ரகசிய இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உலோக விநாயகர் சிலை, நடராஜர், சிவகாமி அம்மன், பாலதண்டாயுதபாணி சிலைகள் மற்றும் ஒரு தஞ்சை ஓவியத்தை அதிகரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்