கும்பகோணம் டூ சென்னை பறந்த சிறுமி...காரணத்தை கேட்ட போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி -சென்னைக்கு விரைந்த பெற்றோர்

x

தஞ்சை பாபநாசத்தில் வீட்டு வேலை செய்ய சொல்லி தாய் திட்டியதால் 13 வயது பள்ளி மாணவி ஒருவர் கோபித்து கொண்டு சென்னைக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த தம்பதி முகமது ரஃபீக் மற்றும் செளவுதா பேகம். இவர்களுடைய மகள் ஹாரிஸா, அருகில் உள்ள பள்ளி கூடத்தில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமி ஹாரிஸாவை அவருடைய தாய் வீட்டு வேலை செய்ய சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், கோபத்துடன் பள்ளிக்கு சென்ற ஹாரிஸா, மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், போலீசார் உதவியுடன் நகர முழுவதும் தேட ஆரம்பித்தனர். இந்நிலையில், சென்னை மாநகர காவலர்களிடம் இருந்த வந்த அழைப்பில், சிறுமி ஹாரிஸா சென்னை கீழப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருப்பதாக கிடைத்த தகவலால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், சென்னை மாநகர காவலர்கள் சிறுமியிடம் விசாரிக்கையில், தாய் திட்டியதால் கோபம் அடைந்து கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு பேருந்து மூலம் சித்தப்பாவின் வீட்டிற்கு வந்ததாக ஹாரிஸா கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமி அவரின் சித்தப்பாவிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், தங்களது குழந்தையை பெறுவதற்காக சிறுமியின் பெற்றோர்கள் சென்னைக்கு விரைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்