நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

x

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்


கன்னியாகுமரி அருகே கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. மீனச்சல் ஸ்ரீகிருஷ்ண சுவாமி கோவிலில் நடைப்பெற்ற இந்த உறியடி நிகழ்ச்சியில், சிறுவர்கள் கிருஷ்ணன், ராதை வேடம் அணிந்து கிருஷ்ணரின் லீலைகளை தத்ரூபமாக நடித்து காட்டினர். மேலும், அங்கு நடைப்பெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


டெல்லி கிழக்கு கைலாசத்தில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா களைகட்டியது. இதையொட்டி வண்ண மின் விளக்கு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில், கோபியர்களுடன் கிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு காத்திருந்த பக்தர்கள், ஹரே கிருஷ்ணா என கோஷம் எழுப்பியும், பஜனை பாடல்கள் பாடியும் பிரார்த்தனை செய்தனர்.


கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள இஸ்கான் கோயிலில் கோகுலாஷ்டமி வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயிலில் அதிக அளவில் திரண்ட பக்தர்கள், சிறப்பு அலங்காரத்தில் ராதையுடன் அருள்பாலித்த கிருஷ்ணனரை வழிபட்டனர். கிருஷ்ணர் புகழ், வரலாற்று கதைகளை பஜனை பாடலாக பாடிய பக்தர்கள், வட்டமாக நின்று கோலாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்