நகைக் கடையின் பூட்டை உடைத்துக் கொள்ளை.. போலீசில் வசமாக சிக்கிய நைட்டி திருடர்கள்

x

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, நகைக் கடையின் பூட்டை உடைத்து, தங்கம், வெள்ளி கொள்ளையடித்த வழக்கில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 3 நைட்டி கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரது நகைக் கடையின் பூட்டை உடைத்து, 6 சவரன் தங்க நகைகள், 6 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நைட்டி அணிந்து கொள்ளையடித்தது தெரியவந்தது.

மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் வரஞ்சரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட உக்கிரவாரி கிராமத்தில் உள்ள ஒரு நகைக் கடையை உடைத்து, 290 சவரன் தங்க நகைகள், 6 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்திலும் இதே கும்பல் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தைச் சேர்ந்த 3 ஈடுபட்டது தெரியவந்தது.

ரத்தோட், அஜய் பகவான் நானாவத், ஜானல் மதியா நானாவத் ஆகிய 3 பேரையும், கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்திருந்த நிலையில், அந்த நபர்களிடம் இருந்து 800 கிராம் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒரு நபரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்