பள்ளி மாணவியை கடத்தி வன்கொடுமை! ஜாமீனில் வந்து மீண்டும் கொடூரம்

x

ஓமலூர் அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, மீண்டும் கொண்டு வந்து விட்டுச் சென்ற இளைஞரை 2 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டி பாலிகாடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு 10ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த‌தாக, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் 2 மாதம் கழித்து ஜாமினில் வெளியே வந்த அந்த நபர், மீண்டும் மாணவியை கடத்திச் சென்று வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து தாய் அளித்த புகாரின் அடிப்படையில் பிரகாசை போலீசார் தேடி வந்த நிலையில், மாணவியை வீட்டின் அருகே விட்டுவிட்டு தலைமறைவானார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பிரகாசை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் இரண்டாவது முறையாக கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்