"உனக்கு ட்ரீட்மென்ட் பண்ணதுக்கு.. இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்" - இளைஞரால் நொந்துபோன டாக்டர்

x

கேரளாவில் சிகிச்சை அளித்த மருத்துவரை இளைஞர் ஒருவர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்தனம்திட்டாவில் உள்ள பாலக்கோடை சேர்ந்த விஷ்ணு விஜயன் என்பவர், இருசக்கர வாகனத்தில் சென்ற போது கீழே விழுந்து காயமடைந்தார். இதையடுத்து, அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மருத்துவர் அவரை நீண்ட நேரம் காக்க வைத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஷ்ணு விஜயன், மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, மிரட்டலும் விடுத்த வீடியோ வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்