"கல்யாணமாகி 1 வருசம் கூட ஆகல அதுக்குள்ளயா.." - புது ஜோடியை குட்டு வைத்து அனுப்பிய நீதிமன்றம்

x

கேரளாவில் விவாகரத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பொது திருமண சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளது.

கேரளாவில் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த தம்பதிகள் விவாகரத்து கோரி குடும்ப நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

ஆனால், கிறிஸ்துவ மதத்துக்கான விவாகரத்து சட்டப்பிரிவு படி இருவரும் திருமணம் ஆகி ஓராண்டு இருக்க வேண்டும் என்றும், அதன்பின்னரே விவாகரத்து கோர முடியும் என கூறி மனுவை ஏற்க குடும்ப நீதிமன்றம் மறுத்துள்ளது.

அதை எதிர்த்து தம்பதிகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற விரும்புவோருக்கு மதத்தின் அடிப்படை சட்டத்தை கூறி காலம் தாழ்த்துவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனது நீதிபதிகள் தெரிவித்தனர்.

விவாகரத்து தொடர்பான சட்ட விதிமுறைகள் மதத்தின் அடிப்படையில் இல்லாமல், குடிமக்களின் நலன் சார்ந்து பொதுவாக இருக்க வேண்டும் என்ற நீதிபதிகள், பொது திருமண சட்டம் தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கருத்து தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்