"அன்று ஜெயலலிதா என்னை பார்த்து..." - ஒரே செகண்ட்டில் ரகசியத்தை போட்டு உடைத்த ரஜினிகாந்த்

x

பொன்னியின் செல்வன் படத்தில் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் தான் நடித்தால் நன்றாக இருக்கும் என, ஜெயலலிதா கூறியதை நடிகர் ரஜினிகாந்த் சுட்டிக்காட்டினார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னத்துக்கு பல்வேறு மாநிலங்களில் மரியாதை இருப்பதாக கூறினார். பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் தான் நடிக்க விருப்பம் தெரிவித்த போது, மணிரத்னம் மறுத்து விட்டதாகவும், படத்தை பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்