ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர்.. முதல் சுற்றில் இந்திய வீரர் அசத்தல்

x

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர்.. முதல் சுற்றில் இந்திய வீரர் அசத்தல்


ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்திய வீரர் பிரனாய் முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் ஹாங்காங் வீரர் ஆங்கஸ் உடன் மோதினார். முதல் செட்டில் 11க்கு 10 என்ற புள்ளிகள் கணக்கில் பிரனாய் முன்னிலையில் இருந்த நிலையில், காயம் காரணமாக போட்டியின் பாதியிலேயே ஹாங்காங் வீரர் வெளியேறினார். இதனால், முதல் சுற்றில் பிரனாய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்