இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (19-01-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

சென்னை மயிலாப்பூரில் 43வது வழுவூரார் நடனம் மற்றும் இசை விழா...

முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று விருதுகளை வழங்கினார்...

--

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு...

திமுக தலைவர் ஸ்டாலினுடன் காங்கிரஸ் மாநில தலைவர்கள் சந்திப்புக்கு பின்னர் அறிவிப்பு...

--

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்...

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி...

--

ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி வியூகத்தை வகுக்கவே அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை....

விரைவில் வேட்பாளரை அறிவிப்போம் என ஜி.கே.வாசன் பேட்டி.....

--

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறதா பாஜக?

3 நாட்களில் முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி...

--

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக நாளை ஆலோசனை...

கடலூரில் நடக்கிறது செயற்குழு கூட்டம்...

--

ஈரோடு கிழக்கு தொகுதியில் ரொக்கமாக அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே கையில் எடுத்து செல்ல அனுமதி...

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பேட்டி...

---

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில், ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்...

நிர்வாகிகளுக்கு இடையே திடீர் மோதல்... ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு...

--

சென்னை நெம்மேலியில் 400 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்...

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேட்டி...

---

தனியார் பால் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்வு...

நாளை முதல் விலையேற்றம் இருக்கும் என

தனியார் நிறுவனங்கள் அறிவிப்பு...

----

தூத்துக்குடியில் கண்டெய்னர் கப்பல் மோதியதால் மூழ்கிய நாட்டுப்படகு...

மீனவர் ஒருவர் உயிரிழப்பு... ஒருவர் படுகாயம்...

---

விருதுநகர் மாவட்டம் கனஞ்சாம்பட்டியில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் இருவர் உயிரிழப்பு...

8 அறைகள் தரைமட்டம் - படுகாயமடைந்த 4 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...

---

திண்டுக்கல் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் அறிவிப்பு...

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு...

---

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில், மேம்பாலத்தில் சென்ற கண்டெய்னர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து அந்தரத்தில் தொங்கியதால் பரபரப்பு...

முன்னால் சென்ற லாரி மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டதால் கட்டுப்பாட்டை இழந்தது...



Next Story

மேலும் செய்திகள்