முன்னாள் மத்திய அமைச்சரை இப்படித்தான் நடத்துவதா?

முன்னாள் மத்திய அமைச்சரை இப்படித்தான் நடத்துவதா?
x

வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய தாங்கள், பாஜகவையும் எதிர்த்து போராடுவோம் என, காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அமைதியான முறையில் நடைபெற்ற பேரணியில் காவல்துறையினரின் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் மீது போலீசார் லத்தியால் தாக்கியதாகவும்முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவரின் மூக்கு கண்ணாடி உடைக்கப்பட்டு அடிக்கப்பட்டதில் அவரின் விலா எலும்பு முறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.ஒரு ஜனநாயக நாட்டின் முன்னாள் மத்திய அமைச்சரை இப்படித்தான் நடத்துவதா? என வீடியோவில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மூத்த தலைவர்கள் பிரமோத் திவாரி மீதும் போலீசார் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் இதற்கு ஒரு போதும் அஞ்ச மாட்டோம் என்றும், அந்த வீடியோவில் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்