காமன்வெல்த்தில் மகளிர் கிரிக்கெட் அறிமுகம்.. முதல் வெற்றியை பதிவுசெய்த இந்தியா

x

காமன்வெல்த் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றதை, இங்கிலாந்தில் உள்ள இந்தியர்கள் ஆடிப்பாடி கொண்டாடினர். காமன்வெல்த் போட்டியில் மகளிர் டி20 போட்டி நடைபெற்று வருகிறது. 2வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. முதலில் விளையாடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 99 ரன்கள் மட்டுமே எடுத்த‌து. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 11 புள்ளி 4 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 102 ரன்களை எடுத்த‌து. இதன் மூலம், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனை, மைதானத்திற்கு வெளியில் இந்திய ரசிகர்கள் மேள தாளங்கள் இசைத்து, ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்