சர்வதேச டி20 தரவரிசை.. பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்

x

சர்வதேச டி20 போட்டிகளின் புதிய தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி, மூன்றாவது இடத்தை பிடித்தார்.

முதலிடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானும், இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்கரமும் உள்ளனர். பந்துவீச்சை பொறுத்தவரை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரன்களை வாரி வழங்கிய இந்திய வீரர் புவனேஸ்வர் குமார், இரண்டு இடங்கள் பின்னடைவை சந்தித்து, ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்