மீண்டும் தொடங்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு?

x

மீண்டும் தொடங்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு?


இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு வரும் 24ம் தேதி மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. 2020ஆம் ஆண்டு படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்துக்கு பின்னர் இந்தியன் - 2 படப்பிடிப்பு தடைப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு படப்பிடிப்பை மீண்டும் தொடங்க படக்குழு திட்டமிட்ட நிலையில், வரும் 24ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதலில் கமல்ஹாசன் சாராத காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்