சுதந்திர தின ஸ்பெஷல்.. பெங்களூருவில் இன்று அரசு பேருந்துகளில் இலவச பயணம்
சுதந்திர தின ஸ்பெஷல்.. பெங்களூருவில் இன்று அரசு பேருந்துகளில் இலவச பயணம்
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெங்களூருவில் இன்று ஒரு நாள் மட்டும் அரசு பேருந்துகளில் இலவச பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் வரலாற்று சிறப்பு மிகுந்த இடங்களுக்கு சாதாரண அரசு பேருந்து முதல் குளிர்சாதன பேருந்துகளிலும் மக்கள் இலவசமாக பயணித்து சுற்றி பார்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணி தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை இன்றொரு நாள் இந்த இலவச பேருந்து சேவை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story