குடும்பத்தினர் கண் முன்னே... | இளைஞர்க்கு நேர்ந்த சோகம்... | கண்ணீர் விட்டு கதறி அழுத உறவுகள்...

x

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் குடும்பத்தினர் கண் முன்னே இளைஞர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாபநாசம் கோயிலுக்கு மதுரையை சேர்ந்த சுமார் 150க்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். அவர்கள் கோயில் படித்துறை அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்த போது, உசிலம்பட்டியைச் சேர்ந்த 19 வயதான கோட்டைசாமி என்ற இளைஞர் எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கிய நிலையில் குடும்பத்தினர் பதறிப் போயினர். தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் தேதி கோட்டை சாமியைப் பிணமாக மீட்டனர். அப்போது இளைஞரின் உறவினர்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுத காட்சி அனைவரையும் கலங்கச் செய்தது


Next Story

மேலும் செய்திகள்