ஊராட்சி அதிமுக தலைவருக்கு எதிராக போர் கொடி தூக்கும் வார்டு உறுப்பினர்கள்..!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே, கூக்கால் ஊராட்சி அதிமுக தலைவர் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கூக்கால் ஊராட்சி தலைவராக வளர்மதிமாயன் உள்ளார். இந்த ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்க்காமலே வேலை பார்த்ததாக பல லட்சம் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ததாக கணக்கு காட்டி, பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் உடந்தையாக இருந்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், கூக்கல் ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் 5 பேர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
Next Story
