ஒழுங்காக செய்யப்படாத ரோந்து பணிகள்... 26 பகுதிகளை சீனாவிடம் இழந்த இந்தியா - அதிர்ச்சி ஆய்வறிக்கை

x

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில், காரகோரம் கணவாயில் இருந்து சுமூர் வரையில் 65 பகுதிகளில் இந்திய ராணுவம் ரோந்து சென்று, தொடர் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகிறது. ஆனால் இந்த 65 பகுதிகளில், 26 பகுதிகளில் ரோந்து பணிகள் ஒழுங்காக செய்யப்படாததால், சீன ராணுவம் அவற்றை கைபற்றியுள்ளதாக லே நகரின் காவல் துறை எஸ்.பியான பி.டி.நித்தியா சமர்பித்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் மற்றும் சிவிலியன்கள் அரிதாக தென்படும் பகுதிகளை சீன ராணுவம் ஆக்கிரமிப்பது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற அனைத்து மாநில டி.ஜி.பிகள் மாநாட்டில் இந்த ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்