இப்படி பண்ணா அது வெறிநாய் ஆகாம என்ன ஆகும்..? டாக்டர் செய்த காரியம் - வைரலாகும் வீடியோ

x

ராஜஸ்தானில் கார் ஒன்றில் தெரு நாயை கட்டி மருத்துவர் ஒருவர் இழுத்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜோத்பூர் மாவட்டத்தில் ரஜ்னீஷ் கால்வா என்ற மருத்துவர் ஒருவர், தனது காரில் தெரு நாயை கட்டி இழுத்து சென்றுள்ளார்.

இதனை பைக்கில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, காரை மறித்து நாயை விடுவித்த‌னர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால், மருத்துவர் மீது விலங்கு வதை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்